உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் (Know your rights, have your say) – தமிழ் (Tamil)

IMHA ஆனது, கீழே குறிப்பிடப்பட்டவர்களுக்கான ஒர் இலவச மற்றும் அந்தரங்கமான பரிந்துபேசும் சேவையாகும் கட்டாயச் சிகிச்சை பெறுகின்றவர்கள், அல்லது கட்டாயச் சிகிச்சை பெறுவது குறித்துக் கவலையில் உள்ளவர்கள்.

Independent Mental Health Advocacy (சுதந்திரமான மனநலப் பரிந்துரைப்பு) (IMHA) ஆனது, உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும், உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் உதவும். IMHA ஆனது, கீழே குறிப்பிடப்பட்டவர்களுக்கான ஒர் இலவச மற்றும் அந்தரங்கமான பரிந்துபேசும் சேவையாகும்:

  • கட்டாயச் சிகிச்சை பெறுகின்றவர்கள், அல்லது
  • கட்டாயச் சிகிச்சை பெறுவது குறித்துக் கவலையில் உள்ளவர்கள்.

IMHA என்பது Victoria Legal Aid இனால் வழங்கப்படும் ஒரு சேவையாகும், ஆனால் இது சட்டசேவை அல்ல. IMHA மனநலச் சேவைகளிலிருந்து தனித்து இயங்ககுகின்றது.

நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்

செப்டெம்பர் 1, 2023 நிலவரப்படி, Mental Health and Wellbeing Act 2022 (மனநலம் மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2022) (Vic) , நீங்கள் கட்டாயச் சிகிச்சை பெறும்போது முக்கிய தருணங்களில் எங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறுகிறது. இந்த ஆவணத்தின் ‘IMHA இற்கு எப்போது அறிவிக்கப்படும்?’ என்னும் பகுதியில் இது பற்றி மேலும் அறியுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டாம் என்று நீங்கள் எமக்குச் சொன்னால் அன்றி நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விளக்குவோம், மேலும் எங்கள் சேவைகள் வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எங்களிடம் கூறுவது எவ்வாறு என்பதை அறியுங்கள்.

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்

நீங்கள் தற்போது, கட்டாயச் சிகிச்சையைப் பெறாவிடினும், ஆனால் கட்டாயச் சிகிச்சையைப் பெறுவது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தொடர்ந்தும் IMHA சேவைகளைப் பெறலாம். அதுபற்றி எங்களுக்கு அறிவிக்கப்படமாட்டாது என்பதால் நீங்கள் எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். 1300 947 820 எனும் எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது imhacontact@imha.vic.gov.au எனும் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பலாம். எங்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்பது பற்றி மேலும் அறியுங்கள். உங்கள் மொழியிலும் எங்களுடன் பேசலாம்.

உங்கள் சிகிச்சைக் குழுவுடன் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ள முடியாது போன்ற உணர்வு அல்லது நீங்கள் ஏதாவது செய்யாவிட்டால் கட்டாயச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்று உங்கள் சிகிச்சைக் குழு கூறியது, போன்றவை கட்டாயச் சிகிச்சையைப் பெறுவதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதற்கான பொதுவான காரணங்களில் உள்ளடங்கும்.

IMHA உங்களை எவ்வாறு ஆதரிக்கலாம்

நாங்கள் உங்களைப் இவ்வாறு ஆதரிக்க முடியும்:

உங்கள் மொழியிலேயே எம்முடன் பேசுவதற்காக நாம் ஒரு மொழிபெயர்த்துக்கூறுபவரை ஏற்பாடு செய்யலாம். Translating and Interpreting Service (மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைப்புச் சேவை) இனையும் அழைக்கலாம். 131 450 எனும் எண்ணை அழைத்து, எம்முடன் தொடர்பினை ஏற்படுதுமாறு கோருங்கள்.

IMHA ஆனது உங்கள் சம்மதத்துடன் உங்களது கருத்துகளை, மனநலம் மற்றும் நல்வாழ்வு சேவைக்கு உங்கள் சார்பாக வழங்க இயலும்.

உங்கள் IMHA வழக்கறிஞர்:

  • உங்கள் வழிகாட்டலின் படி இயங்குவார்
  • உங்களின் சம்மதமின்றி எந்த நடவெடிக்கையும் எடுக்கமாட்டார்
  • நீங்கள் குறைந்தது 16 வயதுடையவராக இருந்தால், உங்கள் சிறந்த நலன்களுக்காக இருக்கக்கூடும் என்று மற்றவர்கள் கருதும் விடயங்களால் வழிநடத்தப்பட மாட்டார்கள். நீங்கள் 15 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடையவராக இருந்தால், உங்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக IMHA உங்கள் கருத்துகளை ஊக்குவிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றும்.

உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எம்மிடம் கூறுங்கள்

உங்களைப் பற்றிய அடையாளம் காணும் தகவலை நீங்கள் வழங்க வேண்டும், இதன் மூலம் நாங்கள் இவற்றை உறுதிசெய்ய முடியும்:

  • உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காமல் இருப்பது, மற்றும்
  • உங்கள் கட்டாயச் சிகிச்சை பற்றி நாங்கள் பெற்ற தகவலை நீக்குவது.

நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல் எங்கள் நிர்வாக ஊழியர்களால் கையாளப்படும். தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோம் மற்றும் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பன பற்றி மேலும் அறியுங்கள்.

  • (03) 9093 3701 எனும் எண்ணை அழையுங்கள்
  • the opt-out form (விருப்பத்தேர்வு நீக்கல்) படிவத்தை நிரப்புங்கள்
  • காகிதப் படிவத்தை பூர்த்தி செய்து to admin@imha.vic.gov.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்புங்கள்:
    • Independent Mental Health Advocacy
      GPO Box 4380
      Melbourne VIC 3001

படிவத்தைச் சமர்ப்பிக்க உதவுமாறு பணியாளர் அல்லது ஆதரவாளர் ஒருவரிடம் நீங்கள் கோரலாம்.

நீங்கள் உங்கள் எண்ணத்தைப் பின்னர் மாற்றிக்கொண்டீர்கள் எனில், கட்டாய சிகிச்சையைப் பெறும்போது IMHA உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என விரும்பினால், நீங்கள் இவற்றைச் செய்யமுடியும்:

IMHA இற்கு எப்போது அறிவிக்கப்படும்?

IMHA இற்கு அறிவிக்கப்படும், எப்போதெனில்:

  • தடயவியல் அல்லது பாதுகாப்பு நோயாளியாக இருந்தால், நீங்கள் ஒரு தற்காலிக சிகிச்சை உத்தரவு அல்லது ஒரு சிகிச்சை உத்தரவில் இடப்பட்டுள்ளீர்கள் எனில்
  • தொடர்புகொள்வதற்கான உங்கள் உரிமை வரையறுக்கப்பட்டுள்ளபோது
  • உங்கள் தற்காலிக சிகிச்சை உத்தரவு, அல்லது சிகிச்சை உத்தரவு, சமூகத்தில் இருந்து உள்நோயாளியாக அல்லது உள்நோயாளி என்பதில் இருந்து சமூகத்திற்கு என மாறுபடும்போது
  • உங்கள் தற்காலிகச் சிகிச்சை உத்தரவு அல்லது சிகிச்சை உத்தரவு இரத்து அல்லது இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தால்
  • உங்களுக்கு ஒரு Mental Health Tribunal விசாரணை திட்டமிடப்பட்டிருந்தால்
  • வரையறுக்கப்பட்ட தலையீடு பயன்படுத்தப்பட்டு நீங்கள் தனிமையில் வைக்கப்பட்டிருந்தால், அல்லது உடல் ரீதியாக அல்லது இரசாயன ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தால்,
  • வேறு நியமிக்கப்பட்ட மனநலச் சேவையில் சிகிச்சைக்காக உங்களை மாற்றுவதற்காக உங்கள் உத்தரவு மாற்றப்பட்டால்.

நீங்கள் ஒரு பாதுகாப்பு நோயாளியாக இருந்தால், IMHA இற்கு அறிவிக்கப்படும்:

  • நீங்கள் ஒரு நியமிக்கப்பட்ட மனநலச் சேவைக்கு, அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது அங்கு கொண்டு செல்லப்படுகிறீர்கள்
  • சிகிச்சையின் பின்னர் நீங்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுகின்றீர்கள்.

நீங்கள் ஒரு தடயவியல் நோயாளியாக இருந்தால், இச்சந்தர்பங்களில் IMHA இற்கு அறிவிக்கப்படும்:

  • தடயவியல் அனுமதிக் குழு போக்குவரத்தை அங்கீகரித்தால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் இயக்கப்பட்டால் தவிர, நியமிக்கப்பட்ட மனநல சேவைக்கு நீங்கள் கொண்டு செல்லப்படுகிறீர்களென்றால்
  • உங்கள் மனநல மருத்துவர் அல்லது தலைமை மனநல மருத்துவர் உங்களை வேறொரு நியமிக்கப்பட்ட மனநல சேவைக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்திருந்தால்
  • இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அல்லது பிறப்பிக்கப்படும்போது, Forensicare (ஃபோரன்சிகேர்) என்பது ஒரு தீவிர கண்காணிப்பு மேற்பார்வை உத்தரவுக்காக மனநல தீர்ப்பாயத்திற்குப் பொருந்தும்.

IMHA தகவல்தாளைத் தரவிறக்கம் செய்யவும் (விருப்பத்தேர்வு நீக்கல் படிவம்)

IMHA information sheet (opt-out form)

IMHA அ ஞ்சல் அட்டையைத் தரவிறக்கம் செய்யவும்

IMHA postcard <தமிழ்>

IMHA இனை எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் மேலும் அறிந்துகொள்வது எப்படி

More information

Know your rights, have your say – webpage translation – English
Word 238.3 KB
(opens in a new window)

Updated